Enable Javscript for better performance
வரி ஏய்ப்பு மூலம் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் கோடி இழப்பு: விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்- Dinamani

சுடச்சுட

    

    வரி ஏய்ப்பு மூலம் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் கோடி இழப்பு: விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்

    By DIN  |   Published on : 27th October 2016 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரி ஏய்ப்பு மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது என விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.
    காட்பாடி அரசு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செ.பார்த்திபன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர் 115 பேருக்கு பட்டங்களை வழங்கி விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:
    தாய், தந்தையருக்குப் பிறகு ஆசிரியருக்குத் தான் மரியாதை கொடுக்கப்படுகிறது. மாணவர்கள் ஏறிச் செல்ல ஆசிரியர்கள் ஏணியாகப் பயன்படுகின்றனர். மாணவர்களுக்கு ஊக்கம், உற்சாகம் அளித்து சாதனை படைக்க ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பாடங்களை புரியும் வகையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும்.
    இந்தியாவில் மூன்று சதவீதம் பேர் தான் வருமான வரி செலுத்துகின்றனர். வரி ஏய்ப்பு மூலம் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. கல்வி, சுகாதாரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
    இந்தக் கல்லூரியில் ஆண்டுதோறும் சிறந்து விளங்கும் தலா ஒரு மாணவ, மாணவிக்கு விஐடி சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றார்.
    பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai