சுடச்சுட

    

    பேர்ணாம்பட்டு ஒன்றிய உருது குறுவள மையம் சார்பில், தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற வேலூர் பாகியாத் நிதியுதவி தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் சையத் பஷீர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் கயிலைநாதன் ஆகியோருக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
     நிகழ்ச்சிக்கு மைய ஆசிரியர் பயிற்றுநர் சங்கீதா தலைமை வகித்தார். மைய ஒருங்கிணைப்பாளர் டி.பஷிருதீன் வரவேற்றார். ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.சுப்பிரமணி விருதுபெற்ற ஆசிரியர்களை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.
    தலைமையாசிரியர்கள் கருணாகரப்பிள்ளை, ரஞ்சன், ரவி, சந்திரன், ஆசிரியர்கள் கோபி, ஷாஹீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai