சுடச்சுட

    

    வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீட்க இளைஞர் மீட்புக் குழு: ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 27th October 2016 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடகிழக்குப் பருவமழையின் போது, வெள்ளத்தில்  சிக்கும் பொதுமக்களை மீட்க இளைஞர் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.
     வரும் வடகிழக்கு பருவமழையின்போது பாதிப்புகள் இல்லாமல் பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:
    கடந்தாண்டு பருவமழையின் போது நேரிட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் 90 இடங்கள் பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக கருதப்பட்டு, பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாப்பதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களைக் கொண்ட உள்ளூர் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை அறிந்து உடனுக்குடன் மீட்க இந்தக் குழுவுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதுதவிர, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தில் பயிற்சி பெற்ற 30 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட
    உள்ளனர்.
    மாவட்டத்தில் உள்ள ஏரி, கால்வாய்களை அந்தந்தப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் தங்கள் சொந்த நிதியின் மூலம் தூர்வாருதல், சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றார்.
    மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, அனைத்துத் துறை அதிகாரிகள், தனியார் தொழிற்சாலை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai