சுடச்சுட

  

  அஞ்சலகங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள சவரன் தங்கப் பத்திரத்தை வாங்கலாம் என அஞ்சலகங்களின் திருப்பத்தூர் கோட்டக் கண்காணிப்பாளர் ந. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
  மத்திய அரசு சவரன் தங்க பத்திரம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக இந்த திட்டம் அனைத்து அஞ்சலகங்களிலும் வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் மத்திய அரசை சார்ந்ததால் பொது மக்களின் முதலீட்டுக்கு மிகவும் பாதுகாப்பு உள்ளது.
  இந்த திட்டத்தில் முதலீடு செய்வது தங்கத்தில் முதலீடு செய்வது போலானது. குறைந்தபட்சம் 1 கிராமிலிருந்து அதிகபட்சம் 500 கிராம் வரை ஒருவர் ஒரு நிதியாண்டில் முதலீடு செய்யலாம்.  
  தங்கத்தின் விலையை மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்கிறது. மத்திய ரிசர்வ் வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை கருத்தில் கொண்டு, தங்கப் பத்திரமாக வழங்கப்படும் (தங்கமாக வழங்கப்படமாட்டாது). இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும்.
  நாம் செய்யும் முதலீடு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியை மத்திய ரிசர்வ் வங்கி வழங்குகின்றது. இந்த வட்டியை 6 மாதத்துக்கு ஒரு முறை முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகின்றது.
  முதிர்வு காலமான 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போது நிலவும் தங்கத்தின் விலைக்கு தங்க பத்திரத்தை கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
  இது ஒரு சிறந்த சேமிப்பு திட்டமாகும். இதுவரையில் 3,600 கோடிக்கு மேலாக பொதுமக்களால் இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
  தற்போது மத்திய ரிசர்வ் வங்கி ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூ. 2,957 ஆக நிர்ணயித்துள்ளது. இந்த விலை தற்போது 24.10.2016 முதல் 02.11.2016 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.  இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து அஞ்சலகங்களிலும் கிடைக்கின்றது.  விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, முதலீடு செய்யும் தொகையை அஞ்சலகத்தில் செலுத்த வேண்டும். செலுத்தும் பணத்துக்கு ஒப்புதல் ரசீது வழங்கப்படும். தங்கத்தில் முதலீடு செய்வதால் பெருத்த லாபம் பெறலாம் என்பதில் ஐயமில்லை. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில்
  குறிப்பிடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai