சுடச்சுட

    

    அரக்கோணம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை முதல் இலவச வைஃபை வசதி  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதி செய்யப்பட்டு, அதனை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதியை செய்து தரக்கோரி அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள்  தொடர்ந்து மனுக்களை ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி வந்தனர்.
    இந்நிலையில் கடந்த பத்து நாள்களாக ரயில் டெல் நிறுவனத்துடன் இணைந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. செயல்முறையாக கடந்த நான்கு நாள்களாக பொதுமக்களும் இந்த வசதியை அனுபவித்து வந்தனர். இந்நிலையில் அக்டோபர் 27-ஆம் தேதி முதல் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதி செயல்படும் என ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai