Enable Javscript for better performance
அரக்கோணம் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதி- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை முதல் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    இலவச வைஃபை வசதி கோரி அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து மனுக்களை ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் கடந்த பத்து நாள்களாக ரயில் டெல் நிறுவனத்துடன் இணைந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அக்டோபர் 27-ஆம் தேதி முதல் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதி செயல்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai