சுடச்சுட

    

    ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி மீண்டும் தொடக்கம்

    By DIN  |   Published on : 28th October 2016 11:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
    அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பிரிவு செயல்பட்டு வந்தது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு காரணமாக இந்தப் பிரிவு மூடப்பட்டது.
    இதைத்தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பிரிவில் பொதுமக்கள் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ளத் தொடங்கினர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்படுவதாகவும், பணியாளர்களால் குறித்த நேரத்தில் புகைப்படம் எடுக்க முடியவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் கர்ப்பிணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.
    இதைத்தொடர்ந்து, அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பிரிவு மீண்டும் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனால், வெள்ளிக்கிழமை முதல் அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
    இப்பணியை நகராட்சி ஆணையர் த.செளந்தரராஜன் பார்வையிட்டார். அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் ஆதார் அட்டைக்கு இங்கு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai