சுடச்சுட

    

    ஆம்பூர் அருகே மாநில நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
     ஆம்பூரில் இருந்து பேர்ணாம்பட்டு செல்லும் சாலையில் தேவலாபுரம், துத்திப்பட்டு, பாங்கிஷாப், எல் மாங்குப்பம், பெரியவரிக்கம், சின்னவரிக்கம், துத்திப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தன. முதலில் சாலையோர தள்ளுவண்டிகளில் தொடங்கிய கடைகள் படிப்படியாக சுடுகாடு சுற்றுச்சுவரைக் கூட விடாமல் நெடுஞ்சாலையோரத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டினர்.  இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வாணியம்பாடி கோட்ட நெடுஞ்சாலைத் துறை உதவி செயற் பொறியாளர் புருசோத்தமன், ஆம்பூர் வட்டாட்சியர் ரூபிபாய் ஆகியோர் பெரியவரிக்கம் பகுதிக்கு வியாழக்கிழமை வந்தனர். அங்கு சாலையோரத்தில் மதுக் கடை அருகே இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற உத்தரவிட்டனர்.
    அங்கிருந்தவர்கள் கடைகளை அகற்ற கால தாமதம் செய்தனர்.
    இதைத் தொடர்ந்து போலீஸாரின் பாதுகாப்போடு அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றினர்.
    இதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகள் படிப்படியாக அகற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai