சுடச்சுட

    

    வேலூரில் இரும்புக் கம்பி தலையில் விழுந்ததில் இளைஞர் வெள்ளிக்கிழமை இறந்தார்.
    காட்பாடி அருகே உள்ள அரும்பருதி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (23). கிரேன் உதவியாளராக வேலை செய்து வந்தார். வேலூர் பழைய புறவழிச்சாலையில் உள்ள நிறுவனத்துக்கு ஏற்றி வந்த இரும்பு கம்பிகளை கிரேன் மூலம் இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது, பெல்ட் அறுந்ததில் மோகன் மீது ராட்சத இரும்புக் கம்பி விழுந்தது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
     இதுகுறித்து, வேலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai