சுடச்சுட

  

  வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.
   ஆரணி கேடிஆர் கல்லூரி உள் விளையாட்டு வளாகத்தில் மண்டல அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வேலூர், செய்யாறு, திருவண்ணாமலை ஆகிய கல்வி மாவட்டங்களிலிருந்து ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்று
  விளையாடினர்.
  இதில், வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முஹம்மத் தல்ஹா, முஹம்மத் அகரம் ஜைத் ஆகியோர் சீனியர் பிரிவில்   முதலிடம் பெற்றனர். இவர்கள் இருவரும் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  
  வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் செந்தில்குமார், முதல்வர் பிங்கிரூஹித், ஆசிரியை கவிதா, உடற்கல்வி ஆசிரியர் ராமு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai