சுடச்சுட

    

    காவேரிப்பாக்கம் அருகே தகராறின்போது இளைஞரை கத்தியால் குத்தியதாக கூலித் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
     காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி தாயம்மா (45). அதேபகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (46). கூலித்தொழிலாளியான இவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு தாயம்மாவிடம் இருந்து கால் பவுன் நகையை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
     இந்நிலையில், தனது நகையை திருப்பித் தருமாறு தாயம்மா அடிக்கடி சரவணனிடம் கேட்டு வந்தார். ஆனால், அவர் நகையை தராமல் காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல், செவ்வாய்க்கிழமை தாயம்மா மீண்டும் சரவணனிடம் நகையைக் கேட்டுள்ளார்.
     அப்போது, அவர் தாயம்மாவை தகாத வார்த்தைகளால் பேசியதாகத் தெரிகிறது. இதுகுறித்து, தாயம்மாவின் மகன் ராஜா (20), சரவணனிடம் கேட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த சரவணன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜாவை குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ராஜா, வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
     இதுகுறித்து காவேரிப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ரங்கநாதன் வழக்குப்பதிந்து, சரவணனை கைது செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai