சுடச்சுட

  

  ராணிப்பேட்டை உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் 100 ஏழை, எளிய குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
  உதவும் உள்ளங்கள் சார்பில் ஆண்டுதோறும் ஏழை, எளிய, ஆதரவற்ற குடும்பத்தினருக்கு மளிகைப் பொருள்கள், இனிப்பு, ஆடைகள் உள்ளிட்டவை அடங்கிய பரிசுத் தொகுப்புகளுடன் அறுசுவை விருந்து அளித்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
  இந்த ஆண்டு 100 ஏழை, எளிய குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை பாரி தொழிலாளர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற விழாவுக்கு உதவும் உள்ளங்கள் செயலர் ஆர்.எஸ்.ஜெயின் தலைமை வகித்தார்.
  ஆற்காடு முதியோர் இல்ல நிர்வாகி ஏ.கே.நடராஜன், பாரி தொழிலாளர் சங்க செயலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கிரிவ்ஸ் காட்டன் தொழிற்சாலை உற்பத்தி பொதுமேலாளர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, 100 ஏழை,எளிய குடும்பத்தினருக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பினை வழங்கிப் பேசினார். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. முன்னதாக ஆற்காட்டை சேர்ந்த ரவிசங்கர் 159 முறை ரத்த தானம் வழங்கியதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
  விழாவில், கிரிவ்ஸ் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜான்சன், சேதுமாதவன், கருணாநிதி, தேவராஜ், ஸ்ரீதர், தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  பள்ளியில் தீபாவளி விழா
  ஆம்பூர், அக். 28: பள்ளிகொண்டா அருகே கழனிப்பாக்கம் ஏவிடி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் தீபாவளி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  இதில், பள்ளியின் ஆலோசனைக்குழு உறுப்பினர் மோகன்குமார், சித்தாத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கண்ணதாசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர் மிட்டாலால் சுரானா நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
  விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
  குடியாத்தம், அக். 28: குடியாத்தம் கிரசென்ட் மெட்ரிக். பள்ளியில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் சபியுல்லா கான் தலைமை வகித்தார். முதல்வர் டி.எஸ். விநாயகம் வரவேற்றார். நகர காவல் ஆய்வாளர் ஜி. மதியரசன், விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பள்ளியின் துணை முதல்வர் எம். வாசுகி நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai