சுடச்சுட

    

    குடியாத்தம் அருகே ஊர்க்காவல் படை காவலரைத் தாக்கிய 6 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    குடியாத்தம் கிராமிய காவல் நிலைய தலைமைக் காவலர் பாஸ்கர், ஊர்க்காவல் படை காவலர் சதீஷ்குமார் (25) இருவரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உள்ளி கூட்டு சாலை அருகே ரோந்து சென்றனர்.
    அப்போது அங்கு சாலையோரம் சிலர் அமர்ந்திருந்துள்ளனர். அவர்களை கலைந்து செல்லுமாறு காவலர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் சதீஷ்குமாரை தாக்கியதாகத் தெரிகிறது.
    இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    இதுகுறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த கிராமிய போலீஸார் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த விஜயராகவன் (30), பாபு (43), மொகிலி (43), வருண்குமார் (23), ரமேஷ் (39), ராஜ்கமல் (23) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai