Enable Javscript for better performance
கஞ்சித் தொட்டி திறந்து டெல் தொழிலாளர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மூன்று மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி காட்பாடி டெல் தொழிலாளர்கள் வியாழக்கிழமை கஞ்சித் தொட்டியை திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டையில் தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது.
    இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதுதொடர்பாக ஆலை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
     இதையடுத்து நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி டெல் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை மனு
    அளித்தனர்.  
    இந்த நிலையில், ஆலை முன் கஞ்சித் தொட்டியை திறந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai