சுடச்சுட

  

  கரகாட்டக் கலைஞரின் உறவினர் கொலை: குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள்

  By DIN  |   Published on : 28th October 2016 11:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூரில் கரகாட்டக்கலைஞரின் சகோதரி மகன் கொலை வழக்கில் தொடர்பிருப்பதாகக் கருதப்படும் ரெளடி ஜானி உள்பட 8 பேரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
   வேலூர், கஸ்பா வசந்தபுரத்தைச் சேர்ந்த கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள், அவரது அக்காள் நிர்மலாவின் மகன் சரவணன் (30) ஆகியோர் செம்மரக் கட்டை கடத்தலில் தொடர்பிருப்பதாகக் கைது செய்யப்பட்டனர்.
   பின்னர், ஜாமீனில் வெளிவந்த சரவணன், தனது மனைவி தேவிபாலா, இரு குழந்தைகளுடன் வசந்தபுரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியே சென்ற அவர், செங்காநத்தம் மலைப்பகுதியில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்டார்.
   இதுதொடர்பாக ஓல்டு டவுனைச் சேர்ந்த அசேன் உள்ளிட்ட இருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், காட்பாடியைச் சேர்ந்த ரெளடி ஜானி உள்ளிட்டோருக்கு சரவணன் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
   சம்பவம் தொடர்பாக ஜானி உள்பட 10 பேர் மீது தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்கிடையே தலைமறைவாக உள்ள ரௌடி ஜானி உள்பட 8 பேரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai