Enable Javscript for better performance
கிடங்கில் பதுக்கிய ரூ. 38 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்: வியாபாரி கைது- Dinamani

சுடச்சுட

    

    கிடங்கில் பதுக்கிய ரூ. 38 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்: வியாபாரி கைது

    By DIN  |   Published on : 28th October 2016 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பத்தூர் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 38 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பதுக்கி வைத்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
     திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே காகிதக் கிடங்கு ஒன்றில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருப்பத்தூர் நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நகர காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையில் புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் திருப்பத்தூர் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள சிவஞானம் என்பவருக்குச் சொந்தமான காகிதக் கிடங்கில் சோதனையிட்டனர். இதில் அனுமதியின்றி 1,500-க்கும் மேற்பட்ட பட்டாசு பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
     மேலும் சிவஞானம் அதே பகுதியில் பட்டாசுக் கடை ஒன்றை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பட்டாசுகளை பதுக்கிய சிவஞானத்தை போலீஸார் கைது செய்தனர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளின் மதிப்பு ரூ. 38 லட்சம் எனக் கூறப்படுகிறது.
     பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் திருப்பத்தூர் தோரணபதியில் உள்ள வெடிமருந்து கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai