சுடச்சுட

  

  நாட்டறம்பள்ளி அருகே 6-வது நாளாக சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் குறித்து வனத் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
   வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சி, எம்ஜிஆர் நகர் பகுதியை ஒட்டியுள்ள தலைதாப்பு மலைப்பகுதி அருகே கடந்த 6 நாள்களாக இரவு நேரங்களில் 2 சிறுத்தைப்புலிகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதையடுத்து திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் தேஜாஸ்வி தலைமையில் வனத் துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மண்டல வன உதவிப் பாதுகாப்பாளர் முகமது ரபீக் தலைமையில், வனச் சரக அலுவலர்கள் பரசிவம் (திருப்பத்தூர்), ஜெயபால் (ஆம்பூர்) உள்பட வனத் துறையினர் 23 பேர் சிறுத்தைப்
  புலிகள் உலாவும் பகுதிக்கு வியாழக்கிழமை சென்று அங்கிருந்து கண்காணித்தனர். மேலும் வனப் பகுதியில் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை அடித்து தீப்பந்தங்களை கொளுத்தியும் சிறுத்தைப்புலிகள் மீண்டும் குடியிருப்புப் பகுதிக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
  எனினும் தொடர்ந்து 6-வது நாளாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai