சுடச்சுட

    

    தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்

    By DIN  |   Published on : 28th October 2016 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெமிலியில் தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசின் ரூ. 5 ஆயிரம் நிதி உதவி மற்றும் உதவி பொருள்களை சோளிங்கர் எம்எல்ஏ என்.ஜி.பார்த்தீபன் புதன்கிழமை வழங்கினார்.
     அரக்கோணத்தை அடுத்த நெமிலி பேரூராட்சி பகுதியான விஜயபுரத்தில் வசிப்பவர் வேலு. இவர் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் தனது குடிசை வீட்டில் திங்கள்கிழமை இரவு படுத்து உறங்கினார். அப்போது சிம்னி விளக்கில் இருந்து தீ குடிசையில் பட்டதில் குடிசை முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து தனது குடும்பத்தினருடன் வேலு வெளியே ஓடி வந்தார். இதையடுத்து வீட்டில் இருந்த பொருள்கள் நாசமாயின. இதுகுறித்து வட்டாட்சியருக்கு கிராம நிர்வாக அலுவலர் கல்பனா தெரிவித்தார்.
     இதைத் தொடர்ந்து தமிழக அரசின் நிதி உதவி ரூ. 5 ஆயிரம் உதவி பொருள்களை சோளிங்கர் எம்எல்ஏ என்.ஜி.பார்த்தீபன் வேலுவிடம் நேரில் வழங்கினார். மேலும் தீயால் பாதிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்ட என்.ஜி.பார்த்தீபன், வேலுவுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நெமிலி வட்டாட்சியர் இளஞ்செழியன், வருவாய் அலுவலர் ஜீவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai