சுடச்சுட

  

  ஆம்பூர் அருகே கோயிலில் நடைபெற்ற யாகபூஜையின்போது, தேனீக்கள் கொட்டியதில் எம்எல்ஏ உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.
   தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெறவேண்டி, ஆம்பூரை அடுத்த வடச்சேரியில் உள்ள சக்தி அம்மன் கோயிலில் யாக பூஜை மற்றும் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
   இந்த யாக பூஜையில் எம்எல்ஏக்கள் ஆம்பூர் ஆர்.பாலசுப்பிரமணி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் மற்றும் கட்சியினர் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் அக்கோயிலில் உள்ள அரச மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன. யாகபூஜை நடந்தபோது அதிலிருந்து வெளியான புகையின் காரணமாக மரத்தில் இருந்த தேனீக்கள் பறந்து வந்தன. இதனைப் பார்த்ததும் பூஜையில் இருந்த அனைவரும் கலைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது  ஆம்பூர் எம்எல்ஏ ஆர்.பாலசுப்பிரமணியை தேனீக்கள் கொட்டின. உடனடியாக அவரை மீட்ட அதிமுகவினர், ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குடியாத்தம் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் அருகில் இருந்த ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் சென்று தப்பினார்.
   மேலும் கட்சி நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டின. இதில் சிலர் அப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
  இந்நிலையில், சிகிச்சைக்குப் பின் எம்எல்ஏ வீடு திரும்பினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai