சுடச்சுட

  

  குடியாத்தம் அருகே நகைக்கடை ஊழியரைத் தாக்கியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  குடியாத்தம் பொன்னம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜா (37). நகைக்கடை ஊழியரான இவர் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
  அப்போது, பொன்னம்பட்டி அருகே சிலர் சாலையில் குறுக்கே நின்று பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் தனக்கு வழிவிடுமாறு ராஜா கேட்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ராஜா தாக்கப்பட்டார். இதனை தட்டிக்கேட்ட ராஜாவின் உறவினர்கள் ரவி (31), முருகநிதி (40) ஆகியோரும் தாக்கப்பட்டனர்.
  இதைத்தொடர்ந்து, காயமடைந்த 3 பேரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் குடியாத்தம் போலீஸார் வழக்குப்பதிந்து பொன்னம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (26), பார்த்திபன் (23), ருத்தீஷ்குமார் (19), கார்த்திக் (19), மணிகண்டன் (29) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai