Enable Javscript for better performance
நவ.2-இல் நாகாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம் நாகாலம்மன் கோயில் மகா கும்பாபிஷகம் நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
    அரக்கோணம் பஜார் பகுதியில் உப்புக்குளக்கரையில் நாகாலம்மன் கோயில் உள்ளது. 75 ஆண்டு பாரம்பரியம் மிக்க இந்த கோயிலில் தற்போது புனரமைக்கப்பட்டது. இந்நிலையில், கோயிலின் மகா கும்பாபிஷேக விழா வரும் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. முதல் நாள் காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், தனபூஜை, மகாலட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகின்றன.
    நவம்பர் 1-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு விசேஷ சந்தி பூஜையும், இரண்டாம் கால யாகபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. 2-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9.45 முதல் 10 மணிக்குள் மூலவர் நாகாலம்மன், கோபுரம், பரிவார மூர்த்திகள் சந்நிதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். அன்று மாலை அம்மன் திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து, 3-ஆம் தேதி நாகசதுர்த்தி விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுவினரும், ராஜாபாதர் தெரு பொதுமக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai