சுடச்சுட

    

    பாஸ்போர்ட்டுக்கு போலிச் சான்றிதழ்: 3 பேர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 28th October 2016 11:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேர்ணாம்பட்டு அருகே பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கு போலி சான்றிதழ் கொடுத்ததாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பேர்ணாம்பட்டு தரைக்காடு பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் அனீப் (28), பங்களா மேட்டைச் சேர்ந்த காதர் அஹமத் (25), கொத்தபல்லியைச் சேர்ந்த ரபீக் (28) ஆகியோர் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தனர்.
    இவர்களின் விண்ணப்பங்களை விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
    அலுவலகத்திலிருந்து,
    பேர்ணாம்பட்டு காவல் நிலையத்துக்கு கடிதம் வந்தது. அதன்படி, போலீஸார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
    இதில், இம்தியாஸ் அஹமத், ரபீக் ஆகியோர் கொடுத்த பள்ளிச் சான்றிதழ்களும், காதர்அஹமத் கொடுத்த பிறப்புச் சான்றிதழும் போலியானவை என தெரியவந்தது.
    இதையடுத்து 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள அவர்களைத் தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai