சுடச்சுட

    

    மண்டல செஸ் போட்டி: ஆம்பூர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 28th October 2016 11:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மண்டல அளவிலான செஸ் போட்டியில், ஆம்பூர் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.
     திருவண்ணாமலை மாவட்டம், ஆலந்தூரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் மண்டல அளவிலான செஸ் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற ஆம்பூர் விவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி ஜி. சினித்தியா மண்டல அளவில் 3-ஆம் இடம் பிடித்தார்.
    இதையடுத்து மாணவி சினித்தியாவை பள்ளியின் தாளாளர் எம். தீனதயாளன், முதல்வர் ஜி. நாகராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் கே. சக்கரபாணி,  வி. ராம்கி ஆகியோர் பாராட்டினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai