Enable Javscript for better performance
மழைநீர் தேங்கும் பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காடு நகரில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகளை  எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
     ஆற்காடு நகரம் 10-வது வார்டுக்குள்பட்ட மேனேஜர் தெருவில், மக்தூர்ஷா மசூதி அருகே 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தாழ்வாக உள்ள இப்பகுதியில்  சாலை, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
    மேலும் மழைக் காலங்களில்  தெருக்களில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மேனேஜர் தெரு பகுதிக்குச் சென்று மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்  அப்பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க அரசு ரூ. 5 லட்சத்து 30 ஆயிரம் ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த நிதி போதுமானதாக இல்லை எனில் அப்பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு அமைக்க சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து,  ஒதுக்கீடு செய்வதாக பொதுமக்களிடம் கூறினார். அப்போது நகராட்சிப் பொறியாளர் அனந்தஜோதி, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் பென்ஸ் பாண்டியன், நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai