Enable Javscript for better performance
மாநில அளவிலான அபாகஸ் போட்டி: பிரைட் மைண்ட்ஸ் பள்ளி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான அபாகஸ் போட்டி: பிரைட் மைண்ட்ஸ் பள்ளி சாம்பியன்

    By DIN  |   Published on : 28th October 2016 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில அளவிலான அபாகஸ் போட்டியில் வாலாஜா பிரைட் மைண்ட்ஸ் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
    தமிழ்நாடு அலாமா அபாகஸ் சார்பில் வேலூரில் நடந்த மாநில அளவிலான மற்றும் மனக் கணக்கு போட்டியில் 22 பள்ளிகள் மற்றும் 26 பயிற்சி நிறுவனங்களில் இருந்து சுமார் 1,500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    இதில் வாலாஜா பிரைட் மைண்ட்ஸ் வித்யோதயாவில் இருந்து 198 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 106 மாணவர்கள் முதலிடமும், 2-ஆம் இடம் மற்றும் 3-ஆம் இடம் பிடித்தனர். போட்டியில் 7-ஆம் வகுப்பு மாணவி எஸ்.தாருண்யா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார். இப்போட்டியில் பங்கேற்ற பள்ளிகளுக்கான ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வாலாஜா பிரைட் மைண்ட்ஸ் வித்யோதயா பள்ளி வென்றது.  
    இதையடுத்து பள்ளி முதல்வர் ஸ்ரீ ஜோதி தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தாளாளர் நிர்மல்ராகவன் வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியளித்த ஆசிரியர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.  இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர்கள் எம்.கே.ஸ்ரீதர் (முதுநிலை), பி.ராமமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai