சுடச்சுட

    

    முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு திருமண நிதியுதவி

    By DIN  |   Published on : 28th October 2016 11:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூரில் நடைபெற்ற முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாமில், திருமண நிதியுதவி, வங்கிக் கடன் வட்டி மானியம் ஆகியவை வழங்கப்பட்டன.
    வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 121 மனுக்கள் அளிக்கப்பட்டன.  இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
    இதைத்தொடர்ந்து, முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் 17 பேருக்கு திருமண நிதியுதவியாக தலா ரூ.20,000, இருவருக்கு ராணுவ மைய நல நிதியாக ரூ.2.20 லட்சம், 3 பேருக்கு வங்கிக் கடன் வட்டி மானியத் தொகையை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வழங்கினார். மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் ச.மணிவண்ணன், முன்னாள் படை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai