Enable Javscript for better performance
மூன்றாவது கண் வாராவதியை சீரமைக்கக் கோரி நகராட்சி ஆணையரிடம் மக்கள் நலக் கூட்டணியினர் மனு- Dinamani

சுடச்சுட

    

    மூன்றாவது கண் வாராவதியை சீரமைக்கக் கோரி நகராட்சி ஆணையரிடம் மக்கள் நலக் கூட்டணியினர் மனு

    By DIN  |   Published on : 28th October 2016 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணம், இரட்டைக்கண்வாராவதிக்கு அருகில் உள்ள மூன்றாவது கண் வாராவதியை சீரமைக்கக்கோரி, மக்கள் நலக் கூட்டணியினர் அரக்கோணம் நகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
    மக்கள் நலக்கூட்டணியில் உள்ள அரக்கோணம் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளர் கருணாமூர்த்தி தலைமையில், கட்சியின் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் அன்புக்கரசி பிரபாகரன், நிர்வாகிகள் துரைமுரளி, மதிவாணன், இளையநிலா, மதிமுக நிர்வாகி பாஸ்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரக்கோணம் நிர்வாகி ஏபிஎம்.சீனிவாசன் உள்ளிட்டோர் இணைந்து அரக்கோணம் நகராட்சி ஆணையர் த.செளந்திரராஜன், பொறியாளர் சண்முகம் ஆகியோரிடம் அளித்த மனுவின் விவரம்:
    அரக்கோணம் நகரின் ஒரு பாதியை மற்றொரு பாதியோடு இணைக்கும் முக்கிய பகுதி இரட்டைக்கண்வாராவதி. இதன் இரு பகுதியிலும் தற்போது வாகனப் போக்குவரத்துக்கு விடப்படுவதால், மூன்றாவது கண்வாராவதியில் தான், நடந்து செல்வோர் சென்று வருகின்றனர். இந்த வாராவதி வழியாகத் தான் மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், அரசு அலுவலகங்களுக்குச் செல்வோர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
    இந்நிலையில் இந்த மூன்றாவது கண் வாராவதி பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் கழிவுநீர் தேங்கிய நிலையிலும், குப்பைகள் அதிகமான நிலையிலும், இரவு நேரங்களில் விளக்குகள் எரியாமலும் உள்ளது. இதனால் அதனுள் நடந்து செல்ல பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தயங்குகின்றனர்.
    இரவு நேரங்களில் இந்த மூன்றாவது கண் வாராவதி சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. எனவே இதனை தினமும் பராமரிக்க சுகாதாரத் துறையில் இருந்து தனியாக ஆள்களை நியமித்து, தூய்மைப்படுத்தி விளக்குகளை எரியச் செய்ய வேண்டும்.
    இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai