சுடச்சுட

  

  வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ஜாம்பியா நாட்டு தனியார் நிறுவன பணியாளர்கள் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் வகையில் கேசிஎம் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
  ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜாம்பியா நாட்டின் கங்கோலா காப்பர் மைன்ஸ் (கேசிஎம்) நிறுவனம் உலகில் காப்பர் உலோக உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனம் தமது பணியாளர்களுக்கு தொழில்நுட்பத் திறன் மேம்பாடு வழங்க விஐடி பல்கலையை தேர்வு செய்துள்ளது.
  இதைத்தொடர்ந்து, நிகழாண்டில் கேசிஎம் நிறுவனம் மூலம் 14 மாணவர்கள் பொறியியல் கல்வி பயில்வதற்காக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், கேசிஎம் நிறுவன தலைமை செயல் அலுவலர் ஸ்டீவன் டின் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
  இந்நிகழ்ச்சியில், விஐடி துணைவேந்தர் ஆனந் ஏ.சாமுவேல், இணை துணைவேந்தர்கள் வி.ராஜி, எஸ்.நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai