Enable Javscript for better performance
விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 28th October 2016 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் டி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
    தீ விபத்து குறித்தும், பட்டாசுகளைக் கையாளும் முறை குறித்தும், தீ விபத்தை தவிர்க்கும் விதம் குறித்தும், தீயணைப்பு நிலைய அலுவலர் பரிமளாதேவி தலைமையில், தீயணைப்புப் படை வீரர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர்.
    பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் ஆர்.சிவசங்கரன், என்.எஸ்.எஸ். அலுவலர் ஜெ.தமிழ்ச்செல்வன், உடற்கல்வி ஆசிரியர் எஸ்.கோபாலகிருஷ்ணன், பள்ளி மேலாளர் ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    கல்லூரியில் தீபாவளி  
    கொண்டாட்டம்
    ஆற்காடு, அக். 27: ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீபாவளி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
    விழாவுக்கு கல்லூரியின் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் ஏ.என்.சரவணன், நிர்வாக அறங்காவலர் ஏ.என்.செல்வம், செயலாளர் ஏ.என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஹம்ரோசியாபேகம் வரவேற்றார்.
    இதில் சிறப்பு பூஜைகள் செய்து இனிப்பு வழங்கி  பட்டாசு வெடித்தனர். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai