Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவர் வீட்டின் அருகில் சொந்தமாக செங்கல் சூளை வைத்துள்ளார்.
    இந்நிலையில் ஜெயபால் தனது குடும்பத்துடன் அண்மையில், வீட்டைப் பூட்டிவிட்டு, செங்கல் சூளைக்குச் சென்றார். பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 13 பவுன் நகைகள், ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.
    இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் கேசவன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai