சுடச்சுட

    

    "வேலை தேடுவதை விடுத்து வேலை தருபவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும்'

    By DIN  |   Published on : 28th October 2016 11:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலையில்லா இளைஞர்கள் கடினமாக உழைத்தால் தொழில் முனைவோராகி நல்ல வருமானம் ஈட்டலாம் என இந்திய சிறு தொழில்கள் சங்கக் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டார துணைத் தலைவர் டி.வி.ஹரிஹரன் தெரிவித்தார்.
     ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் தொழில் முனைவோர் ஆலோசனை மையத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பி.எம்.ஆதில் அஹமத் தலைமை வகித்தார். தொழில் முனைவோர் ஆலோசனை மைய ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் வரவேற்றார். ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்து டி.வி. ஹரிஹரன் பேசியதாவது:
     வேலையில்லா இளைஞர்கள் வேலை தேடுவதைத் தவிர்த்து மற்றவர்களுக்கு வேலை தருபவர்களாக மாற வேண்டும். கடுமையாக உழைத்து தொழில் முனைவோராகி வருமானம் ஈட்டி தனக்கும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் உதவிபுரிய வேண்டும். தற்போது கல்லூரி மாணவர்களுக்கு தொழில் முனைவோர் ஆவதற்கான ஆலோசனை வழங்குவதற்காக கல்லூரிகளில் தொழில் முனைவோர் ஆலோசனை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதனைப் பயன்படுத்தி தொழில் முனைவோராகலாம் என்றார்.
     குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன மேம்பாட்டு துணை இயக்குநர் எம்.அசோகன் பேசியதாவது:
     புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு கடனுதவி வழங்குவதற்காக நீட்ஸ், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலை உருவாக்கும் திட்டம் போன்றவை மூலம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. அதற்கு மானியமும் வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
     இந்திய சிறுதொழில்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டார இணைச் செயலாளர் எம்.வி.சுவாமிநாதன், வேலூர் மாவட்ட குறு, சிறு தொழில்முனைவோர் சங்கச் செயலாளர் பி.ஹரிஹரன், துணைத் தலைவர் ஆர்.ஆறுமுகம், பேராசிரியர்கள் சஞ்சீவ், பாத்திமா, முஹம்மத் யூனுஸ் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.  

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai