சுடச்சுட

    

    வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த தாய், தனது இரு குழந்தைகளுடன் விஷம் கலந்த பழச்சாறை அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
     வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் (36). விவசாயியான இவரது மனைவி ரம்யா (28). இவர்களுக்கு ஆஷா (5), ஹேமஷாலினி (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கோபாலுக்கும், ரம்யாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
     இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த ரம்யா, மாம்பழச் சாறில் விஷத்தை கலந்து, 2 குழந்தைகளுக்கும் கொடுத்தார். பின்னர், அவரும் அதனை குடித்தார். இந்நிலையில் வெளியே சென்றிருந்த கோபால் வீட்டுக்கு வந்தார். அப்போது, மனைவி, குழந்தைகள் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
    அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிக்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai