சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூர் அணையில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் இறந்தார்.
     திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் லட்சுமணன் (18). இவர், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வீட்டுக்கு வந்த உறவினர் மற்றும் நண்பர்களுடன் திங்கள்கிழமை காலை ஆண்டியப்பனூர் அணைக்கு குளிக்கக் சென்றார்.
    அப்போது லட்சுமணன் அணையை நீந்தி கடப்பதாக நண்பர்
    களிடம் கூறி தண்ணீரில் குதித்து நீந்திச் சென்றுள்ளார். அப்போது நடு
    வழியில் மூச்சு திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
    தகவலறிந்த அறிந்து அங்கு வந்த ஆலங்காயம் தீயணைப்புத் துறையினர், சுமார் 5 மணி நேரம் போராடி லட்சுமணனின் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
     இந்த சம்பவம் தொடர்பாக குரிசிலாபட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai