சுடச்சுட

    

    அரக்கோணம் நகர புகைப்பட மற்றும் விடியோ கலைஞர்கள் சங்க 2016-17ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
    பழைய நீதிமன்ற வளாகம் எதிரே தனியார் கட்டடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தலைவர் மோகன் தலைமை வகித்தார். இதில் தலைவராக என்.மோகன், செயலராக ஜி.சந்திரகுப்தா, பொருளாளராக விஜயகுமார், கெளரவத் தலைவராக ஜி.கோபால் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் துணைத் தலைவர்கள், துணைச் செயலர்கள், துணை பொருளாளர், செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தற்போது தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிக்கும் வகையில் சங்கவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனந்தன் நன்றி தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai