சுடச்சுட

    

    அறிவியல் கண்காட்சி: சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 31st October 2016 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    வேலூர் கல்வி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
    இதில் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜி.எஸ்.யுகேந்திரன் முதலிடமும், கணிதப் புதிர் போட்டியில் எல்.யுவன் முதலிடமும் பிடித்தனர்.
    மேலும் சில மாணவர்கள் கண்காட்சியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றனர்.
    இதையடுத்து நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளிச் செயலர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், தலைமையாசிரியர் ஜி.புருஷோத்தமன், உதவித் தலைமையாசிரியர்கள் எஸ்.நேதாஜி, எஸ்.கலைவாணி உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai