Enable Javscript for better performance
இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
    ஆம்பூரை அடுத்த சின்னப்பல்லிகுப்பம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் மகேந்திரன் (32).  இவர் அதே முகாமைச் சேர்ந்த யாதகாளியுடன் (34) கடந்த 27-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் மேல்சாணாங்குப்பம் நோக்கிச் சென்றார்.  அப்போது திடீரென குறுக்கே நாய் வந்ததால் பிரேக் போட்டதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இருவரும் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
     அங்கு மகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இறந்தார். இதுகுறித்து உமர்ஆபாத் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai