சுடச்சுட

    

    நாட்டறம்பள்ளி அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 5 பேர் காயமடைந்தனர்.
    ஆந்திர மாநிலம், விஜயவாடா ஸ்ரீநகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரவர்மா (23), கல்லூரி மாணவர். இவர் தனது நண்பர்கள் ரவிதேஜா (25), வருண் (26), சேமநாதன் (26) உள்பட 4 பேர் பெங்களுரில் இருந்து சென்னை நோக்கி காரில் சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனர். காரை நரேந்திரவர்மா ஓட்டி வந்தார்.
    வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி மேம்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவர் மீது மோதி எதிர் திசையில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸார் சம்பவ இடம் சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    மற்றொரு விபத்து: நாட்டறம்பள்ளி சின்னசாமி தெருவைச் சேர்ந்தவர் சாமுடி (45), விவசாயி. இவர் ஞாயிற்றுக்கிழமை நாட்டறம்பள்ளியில் இருந்து சைக்கிளில் கோட்டக்கொள்ளை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவரது சைக்கிள் மீது மோதியது. இதில் சாமுடி தலையில் பலத்த காயமடைந்தார்.
    உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த இரு விபத்துகள் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai