சுடச்சுட

    

    திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
    ஆம்பூர் அருகே நாச்சார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முத்துவின் மகள் விஜயலட்சுமி (25). இவருக்கும், இவருடைய தாய்மாமா ராஜிக்கும் (27) கடந்த மாதம் 14-ஆம் தேதி திருமணம் ஆனது. தலை தீபாவளிக்கு நாச்சார்குப்பத்திற்கு ராஜு மற்றும் விஜயலட்சுமி இருவரும் வந்தனர்.
    ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் விஜயலட்சுமி பூச்சி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து ஆம்பூர் கிராமியக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். திருப்பத்தூர் சார் ஆட்சியர் விசாரணை நடத்துகிறார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai