சுடச்சுட

  

  முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஷரியத்) வழங்கும் பாதுகாப்பு குறித்த இஸ்லாமியப் பெண்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் வாணியம்பாடி இசுலாமிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
  இதில் புதுச்சேரி, தமிழ்நாடு ஜமாத்தே இஸ்லாமிஹிந்த் ஒருங்கிணைப்பாளர் பாகிரா அதீத், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினர்கள் நிக்கத்பாதிமா சுஹேல் (சென்னை), அஜீமா நாஹித் (மும்பை) ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், வாணியம்பாடி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்கள் கலந்து கொண்டனர்.
  முன்னதாக செய்தியாளர்களிடம் பாகிரா அதீத் கூறியதாவது:
  சிறுபான்மையினருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்கிறது. உத்தரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை மனதில் கொண்டு சிறுபான்மையினருக்கு எதிராக பெருவாரியான மக்களை திசைத் திருப்பி அவர்களின் வாக்குகளைப் பெறவே மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது.
  ஷரியத் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை தடுக்க மத்திய அரசு முயல்கிறது. இஸ்லாமிய பெண்கள் அனைவரும் திருமணம், மணமுறிவு, வாரிசுரிமை உள்பட அனைத்து ஷரியத் சட்டத்தை முழு மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளனர். இதில் ஏதாவது பிரச்னை என்றால், ஷரியத் சட்டம் மூலமாகவே தீர்வை தேடிக் கொள்வோம் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai