சுடச்சுட

  

  கணிதத் திறனறித் தேர்வு: பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்

  By DIN  |   Published on : 31st October 2016 11:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் கணிதமேதை சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறனறித் தேர்வுகள் வருகிற டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
  இதுகுறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலர் துரைராஜ் ஞானமுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
  அடிப்படை கணிதத்தை மையமாகக் கொண்டு, கூர்ந்து கவனித்து திறனிடுதல், சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. 5 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் இந்தத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
  போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மிக மிக நன்று பிரிவில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பரிசு, மிக நன்று பிரிவில் ரூ.1,000 மதிப்பில் இரு பரிசுகள், நன்று பிரிவில் ரூ.500 மதிப்பில் 20 பரிசுகள் வழங்கப்படும்.
  பங்கேற்க  விரும்பும் மாணவர்கள் மாவட்ட அறிவியல் மையத்தில் கட்டணமாக ரூ.100ஐ செலுத்தி பெயரை டிசம்பர் 2ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் 0416-2253297 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai