சுடச்சுட

  

  வேலூரில் கரகாட்டக்கலைஞரின்  உறவினர் கொலை வழக்கு தொடர்பாக 10 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
  வேலூர் கஸ்பா வசந்தபுரத்தைச் சேர்ந்த கரகாட்டக்கலைஞர் மோகனாம்பாள். இவரது வீட்டிலிருந்து கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் செம்மரக் கட்டை கடத்தலில் தொடர்பிருப்பதாகக் கூறி மோகனாம்பாள், அவரது அக்காள் நிர்மலாவின் மகன் சரவணன் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
  ஜாமீனில் வெளிவந்த சரவணன் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி வேலூர் செங்காநத்தம் மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
   விசாரணையில் காட்பாடியைச் சேர்ந்த ரெளடி ஜானி என்ற ஜான்பால் ராஜுடன் (28) ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சரவணன் கடத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
  இதுதொடர்பாக தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தக் கொலையில் தொடர்புடைய ஜானி உள்ளிட்டோரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.
  இந்த நிலையில், சேண்பாக்கம் வினோத்குமார் (32), கொணவட்டம் முனீர் (29), பாஷா (28), கொசப்பேட்டையைச் சேர்ந்த சின்னா என்ற சந்திரன் (30), நவீன்குமார் (26), சலவன்பேட்டை ரகுபதி (24), சண்முகம்(26), தொரப்பாடி மாரி (26), அப்துல்லாபுரம் குமார் (36), ராமு (24) ஆகிய 10 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ஜானியை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai