சுடச்சுட

  

  கரகாட்டக் கலைஞரின் உறவினர் கொலை: ஆந்திராவில் தனிப்படை போலீஸார் விசாரணை

  By DIN  |   Published on : 31st October 2016 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செம்மரக் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட கரகாட்டக் கலைஞரின் உறவினர் கொலை வழக்குத் தொடர்பாக தனிப்படை போலீஸார் ஆந்திர மாநிலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
  காட்பாடியில் ஒரு வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, போலீஸார் நடத்திய சோதனையில் சுமார் ரூ.5 கோடி ரொக்கமும், 73 சவரன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்பந்தமாக கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள் (54), இவரது அக்கா நிர்மலா, அக்காள் மகன் சரவணன் (33) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் மூவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். அண்மையில் சரவணன் கடத்தப்பட்டதாக அவரது மனைவி வேலூர் தெற்கு போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் வேலூர் ஓல்டு டவுன் மலைப் பகுதியில் சரவணன் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது சம்பந்தமாக சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மேலும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தனிப்படையினர் ஆந்திர மாநிலத்தில் முகாமிட்டு கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai