Enable Javscript for better performance
கிணற்றில் மீன் வியாபாரி சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காடு அருகே கிணற்றிலிருந்து மீன் வியாபாரி சடலம் மீட்கப்பட்டது.
    ஆற்காட்டை அடுத்த முப்பதுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (55), மீன் வியாபாரி. இவர் தீபாவளியன்று வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் வெளியில் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
    இந்நிலையில் லப்பப்பேட்டை சாலையில் உள்ள கிணற்றில் குமார் சடலமாக மிதப்பது தெரியவந்தது. ஆற்காடு கிராமிய போலீஸார், சடலத்தை மீட்டதுடன், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai