Enable Javscript for better performance
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது திங்கள்
    கிழமை தெரியவந்தது.
    வேலூரை அடுத்த புதுவசூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஊத்துக்கட்டம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஆண்டுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உண்டியல் திறக்கப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை பக்தர்கள் கோயிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது தெரியவந்தது. உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
    இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகி சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai