சுடச்சுட

  

  சோளிங்கர் அருகே நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
   சோளிங்கரை அடுத்துள்ளது அக்கச்சிகுப்பம் கிராமம். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தது எஸ்.அக்ராவரம் கிராமம். அக்கச்சிகுப்பம் மற்றும் எஸ்.அக்ராவரம் கிராம மக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து போலீஸார் இருதரப்பினரையும் அவ்வப்போது சமரசம் செய்து வந்தனர்.
   இந்நிலையில் எஸ்.அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் கேசவனை, அக்கச்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஞாயிற்றுக்கிழமை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எஸ்.அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் அக்கச்சிகுப்பம் கிராமத்துக்குச் சென்று அங்கிருந்த சிலரை கைகளால் தாக்கியதாகத் தெரிகிறது.
   இதில் பலத்த காயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர் சரவணன் (21), அவரது சகோதரி சாரதா (28) ஆகியோர் சோளிங்கர் அரசு மருத்துவ
  மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
   இதுகுறித்து சோளிங்கர் காவல் நிலையத்தில் சரவணன் அளித்த புகாரின்பேரில், எஸ்.அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன், மஸ்தான், விஜயகுமார், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai