சுடச்சுட

  

  தடுப்புச் சுவர் மீது பைக் மோதி 50 அடி பள்ளத்தில் விழுந்தவர் சாவு

  By DIN  |   Published on : 31st October 2016 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு மேம்பால தடுப்புச் சுவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டவர் 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
  ஆம்பூரை அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜி (எ) முகுந்தன் (42). சரவணன் (35). நண்பர்களான இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.
  இந்நிலையில் சனிக்கிழமை மாலை இருவரும் இருசக்கர வாகனத்தில் ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை முகுந்தன் ஓட்டிச் சென்றார். வளையாம்பட்டு மேம்பாலத்தில் வந்தபோது, திடீரென இருசக்கர வாகனம் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் முகுந்தன் மேம்பாலத்திலிருந்து 50 அடி பள்ளத்தில் கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலே இறந்தார். சரவணன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  இந்த விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai