சுடச்சுட

    

    காவேரிப்பாக்கம் அருகே தடுப்புச் சுவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    ராணிப்பேட்டை காரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(26). சென்னை எண்ணூர் பாரத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (30). நண்பர்களான இருவரும் சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
    கடந்த வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்னையில் இருந்து இருவரும் காரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காவேரிப்பாக்கத்தை அடுத்த ராமாபுரம் அருகே வந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் தமிழரசன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த ரமேஷ், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai