சுடச்சுட

    

    வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் தன்வந்திரி அவதார தினத்தை முன்னிட்டு இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
    தன்வந்திரி அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வேத தினமாகக் கொண்டாடுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தன்வந்திரி பீடத்தில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், தன்வந்திரி ஹோமமும் நடைபெற்றது.
    பின்னர், நடைபெற்ற இலவச ஆயுர்வேத முகாமை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தொடங்கி வைத்தார். இதில், மருத்துவர் மீரா தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில், போஸ், பாலாஜி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai