சுடச்சுட

    

    தனியார் நிறுவன ஊழியர் உள்பட மூவரை தாக்கிய வழக்கில் 3 இளைஞர்களை ஆற்காடு போலீஸார் கைது செய்தனர்.
    ஆற்காட்டை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் தாமு (28). இவர் ஆற்காடு பார்த்தீபன் நகரில் உள்ள தனது அக்கா தேவிகா வீட்டுக்கு சனிக்கிழமை வந்துள்ளார். அப்போது மூன்று இளைஞர்கள் தாமுவை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். இதனை தாமுவின் உறவினர் அருண் (25) தட்டிக் கேட்டுள்ளார். தேவிகாவும் அங்கு வந்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியதில், தாமு, அருண், தேவிகா ஆகிய மூவரையும் அந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து, ஆற்காட்டைச் சேர்ந்த தினேஷ் (22), கார்த்திகேயன் (22), சங்கர் (24) ஆகியோரை கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai