Enable Javscript for better performance
தாழைமடுவு காளியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தை அடுத்த ஜமனாமரத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட மலைக் கிராமமான கிளையூரில் உள்ள தாழைமடுவு காளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    இதையொட்டி, சுவாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம், அலங்காரம்  நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
     பின்னர் அங்குள்ள தாழைமடுவு தீர்த்தத்தில் புனிதநீராடி, அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து தரிசனம் செய்தனர்.
    மேலும், அம்மன் மடியில் நினைத்த காரியம் நடக்கவேண்டி எலுமிச்சம் பழத்தை வைத்து வாக்கு கேட்டுச் சென்றனர். அதைத் தொடர்ந்து சுவாமிக்கு இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
     நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai